பெண் சிப்பாய்கள் மீது பாலியல் இம்சை குற்றச்சாட்டு ; மறுக்கிறது படைத்தரப்பு
தமிழ் பெண் சிப்பாய்கள் மீது இராணுவ உயர் அதிகாரிகளால் பாலியல் வன்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது.
தமிழ் பெண் சிப்பாய்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாகவும் இதனால் அவர்கள் கருக்கலைப்பு செய்யும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் பாலியல் இம்சைகள் காரணமாக ஒரு சிப்பாய் காணாமற்போயுள்ளதாகவும் இணையங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த செய்திகளில் எந்த வித அடிப்படை உண்மையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
இவை யாவும் திட்டமிட்டு படையினர் மீது அவதூறு பூசும் முயற்சிகளே எனவும் ஒரு போதும் படையினர் பெண் சிப்பாய்கள் மீது பாலியல் சார் இம்சிப்புக்களில் ஈடுபடுவதில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் பெண் சிப்பாய்கள் பாலியல் ரீதியாக இம்சிக்கப்படுவதாகவும் இதனால் அவர்கள் கருக்கலைப்பு செய்யும் அளவிற்கு சென்றுள்ளதாகவும் பாலியல் இம்சைகள் காரணமாக ஒரு சிப்பாய் காணாமற்போயுள்ளதாகவும் இணையங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த செய்திகளில் எந்த வித அடிப்படை உண்மையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
இவை யாவும் திட்டமிட்டு படையினர் மீது அவதூறு பூசும் முயற்சிகளே எனவும் ஒரு போதும் படையினர் பெண் சிப்பாய்கள் மீது பாலியல் சார் இம்சிப்புக்களில் ஈடுபடுவதில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண் சிப்பாய்கள் மீது பாலியல் இம்சை குற்றச்சாட்டு ; மறுக்கிறது படைத்தரப்பு
Reviewed by NEWMANNAR
on
March 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 19, 2014
Rating:

No comments:
Post a Comment