கடலுக்கடியிலிருந்து வந்த சமிக்ஞை நின்று போனது; கறுப்புப் பெட்டியும் காலாவதியானதா?
காணாமற்போன மலேசிய விமானத்தைத் தேடி வரும் அவுஸ்திரேலிய அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு அடியில் இருந்து வந்திருந்த சமிக்ஞைகளை இன்று கேட்க முடியாது போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதலில் சீனக் கப்பலுக்கும் பின்னர் அவுஸ்திரேலியக் கப்பலுக்கும் கேட்டிருந்த இந்த சமிக்ஞை விமானம் ஒன்றின் கறுப்புப் பெட்டி பதிவுக் கருவியில் இருந்து வருவதை ஒத்து இருந்ததால், இது மலேசிய விமானத்தின் பதிவுக் கருவியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
சாதாரணமாக கறுப்புப் பெட்டியின் மின்சக்திக் கலங்கள் ஒரு மாதத்தில் காலாவதியாகிவிடும் என்ற நிலையில், இந்தத் தேடுதல் நடவடிக்கை பாதகமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கலாம் ஒருங்கிணைப்பு அதிகாரி அங்கஸ் ஹூஸ்டன் கூறினார்.
இனிமேல் சமிக்ஞை வரவில்லை என்றால், கடலுக்கடியில் குறிப்பாக எந்த இடத்தில் கறுப்புப் பெட்டி கிடக்கிறது என்று கணிக்க முடியாது.
இந்நிலையில், ஏற்கனவே சமிக்ஞை வந்த இடத்தில் ஆளில்லா நீர்மூழ்கி இயந்திரத்தை அனுப்பி விமானச் சிதிலங்கள் கிடக்கின்றனவா என்று தேடிப்பார்க்க முடியும் என ஹூஸ்டன் குறிப்பிட்டார்.
கடலுக்கடியிலிருந்து வந்த சமிக்ஞை நின்று போனது; கறுப்புப் பெட்டியும் காலாவதியானதா?
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 08, 2014
Rating:


No comments:
Post a Comment