வவுனியாவில் வயல் விழா
விவசாயத்தை மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் வயல் விழா வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் நிலை காரணமாக, வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் மற்றும் தொழில்நுட்ப யுக்திகளை ஆராய்ந்து கொள்ளவதற்கான வழிவகைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வட மாகாண விவசாய பணிப்பாளர், வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் அ. சகிலாபானு உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்
வவுனியாவில் வயல் விழா
Reviewed by NEWMANNAR
on
April 05, 2014
Rating:
No comments:
Post a Comment