பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் :மூவருக்கு மரண தண்டனை
பெண் புகைப்பட பத்திரிகையாளர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதித்து இந்திய முதன்மை செஷன்ஸ் கோர்ட் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. 4வது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை, மகாலட்சுமி பகுதியில் பாழடைந்த நிலையில் கிடக்கும் சக்தி மில் வளாகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் திகதி 22 வயது பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் 5 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விஜய் ஜாதவ் (19), காசிம்
பெங்காலி (21), சலீம் அன்சாரி (28), சிராஜ் கான் மற்றும் ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த முதன்மை செசன்ஸ் கோர்ட் நீதிபதி ஷாலினி ஜோஷி, இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி மற்றும் சலீம் அன்சாரி ஆகிய மூவரும் இந்திய தண்டனை சட்டத்தின் திருத்தப்பட்ட பிரிவான 376, பிரிவின் கீழ் குற்றவாளிகள் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு மரணதண்டனை விதித்தார்.
பெண் பத்திரிகையாளர் பலாத்காரம் :மூவருக்கு மரண தண்டனை
Reviewed by NEWMANNAR
on
April 05, 2014
Rating:

No comments:
Post a Comment