போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்தும் வகையில் மன்னாரின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரிசி ஆலை திறந்து வைப்பு.
மன்னாரில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள், ஊனமுற்றோர் ஆகியோரை மேம்படுத்தும் முகமாக அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்துக்குமான குழுவினரின் திட்டங்களுக்கு அமைய மேற்படி ஆலை மன்னாரின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேனுடையான் கிராமத்தில் இந்த அரிசி ஆலை கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேனுடையான் எனும் இக்கிராமம் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரிசி ஆலையானது சர்வமத குருக்களின் ஆசீரோடு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் மற்றும் டயஸ் போராலங்கா இயக்குனர் ஆகியோரினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னாரின் மறுமலர்ச்சி 2022 திட்ட உறுப்பினர்கள் உட்பட 100க்கும் அதிகமான பிரதேச மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
'எதிர்வரும் அறுவடைக்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் இந்த ஆலையில் வேலை செய்வதனூடாக தமது நாளாந்த வருமானத்தை ஈட்டிக்;கொள்ள முடியும்'என பிரதமஅதிதியாக கலந்து கொண்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் திரு. சிறிஸ்கந்தகுமார் தெரிவித்தார்.
![]() |
Add caption |
போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்தும் வகையில் மன்னாரின் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரிசி ஆலை திறந்து வைப்பு.
Reviewed by NEWMANNAR
on
June 18, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment