மாற்றாற்றல் உள்ளவர்களும் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழ வழி செய்யவேண்டும்-அமைச்சர் பா.டெனிஸ்வரன் - படங்கள்
வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் ஒன்றியத்துக்கும் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்குமான சந்திப்பொன்று மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தில் 09-06-2014 திங்கள் காலை இடம்பெற்றது. வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் ஒன்றியத்தின் தலைவர் சுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வட மாகாணத்தில் இயங்கும் 12 மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கத்தில் 09 சங்கங்கள் கலந்துகொண்டன. (SEED,MARDAP,NAHROW,ORHAN,VAROD,BETHESDA,VVH,யாழ் மாவட்ட வாழ்வகம்,யாழ் விழிப்புலனற்றோர் சங்கம்) தவிர்க்க முடியாத காரணத்தால் 03 சங்கங்கள் கலந்துகொள்ளவில்லை.
வருகை தந்த 09 சங்கங்களின் பிரதிநிதிகளும் முகாமையாளர்களும் தமது தேவைகளையும், கருத்துக்களையும் முன்வைத்தனர்.இவர்களில் பெரும்பாலானோர் சுயதொழில், கற்றல் உபகரணங்கள், சீரான போக்குவரத்து, கணினி வசதிகள், புதிய கைத்தொழில் முறைகளை ஏற்ப்படுத்தல் போன்ற பல்வேறு தேவைகள் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மாற்றாற்றல் உள்ளவர்களும் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழ வழி செய்யவேண்டும். கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாகவும் குடும்பங்களையும் இளந்து அநாதைகளாகவும் விதவைகளாகவும் வாழும் குடும்பங்களையும் முதற் கண் கொண்டு பார்க்கவேண்டியது எமது இன்றைய காலத்தின் கடமையாகும்.
எனவே எனக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே அனைவரும் இதற்க்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் காலங்களில் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கு கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், போக்குவரத்தின் போது பேரூந்துகளில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட ஆசனங்களை வழங்கக்கூடிய வகையிலான ஒழுங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு மேலும் மாற்றாற்றல் உள்ளவர்களை இனம்கண்டு அவர்களுக்கும் இச்சங்கத்தினூடாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள இச்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மாற்றாற்றல் உள்ளவர்களும் சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழ வழி செய்யவேண்டும்-அமைச்சர் பா.டெனிஸ்வரன் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
June 17, 2014
Rating:

No comments:
Post a Comment