அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; ஏழு பேர் கைது

யாழ். காரைநகர் ஊரி பகுதிகளில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழு கடற்படை வீரர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். 

 சந்தேகநபர்கள் யாழ் சிறுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு அடையாள அணிவகுப்பிற்கும் உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார். 

 இந்த வழக்கு மீண்டும் இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அஜித் ரோஹண கூறினார். இதேவேளை, ஊரி பகுதியைச் சேர்ந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக முற்பகல் 10.30 முதல் 11.30 வரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

 காரைநகர், ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்; ஏழு பேர் கைது Reviewed by NEWMANNAR on July 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.