அண்மைய செய்திகள்

recent
-

தன் மகளை இளவரசியாக்கிய தந்தை - படங்கள்

குழந்தைகள் சில நேரங்களில் பெற்றோரிடம், ‘நான் இளவரசன் அல்லது இளவரசியாக முடியுமா?’ என கேட்பார்கள். குழந்தைகளின் இந்த ஆசையை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் பெற்றோர், அப்போதே அதை மறந்து விடுவர். ஆனால் தனது குழந்தையின் ஆசைக்காக அமெரிக்கர் ஒருவர் புதிய பேரரசையே உருவாக்கி விட்டார். 

அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த ஜெர்மியா ஹீட்டன்தான் அந்த பாசக்கார தந்தை. ஹீட்டனின் 7 வயது மகளான எமிலி, ஒருநாள் தந்தையுடன் விளையாடும் போது, ‘அப்பா ஒருநாள் நான் உண்மையிலேயே இளவரசியாக மாறுவேனா?’ என்று கேட்டாள். அதற்கு, ‘நிச்சயமாக நீ இளவரசிதான்’ என்று கூறிய ஹீட்டன், அத்துடன் நிற்காமல் உடனே அதற்கான பணிகளை தொடங்கினார். இதற்காக ஆப்பிரிக்காவுக்கு சென்ற அவர், அங்கே எகிப்துக்கும், சூடானுக்கும் இடையே உள்ள 1,300 சதுர கிலோமீட்டர் பாலைவனப்பகுதியை தனது மகளுக்காக பேரரசாக உருவாக்கி விட்டார்.

 மக்கள் யாரும் வசிக்காத அந்த பகுதிக்கு இதுவரை எந்த நாடும் உரிமை கொண்டாடவில்லை என்பதால், இந்த பகுதியை தனது மகளின் பேரரசாக அங்கீகாரம் பெற திட்டமிட்டுள்ளார். இளவரசிகள் சூடும் மணிமுடி ஒன்றை தனது மகளுக்கு சூட்டியுள்ள அவர், அவளுக்காக அரச குடும்பத்தினர் தூங்கும் படுக்கை ஒன்றையும் வாங்கியுள்ளார். மகளை ‘இளவரசி எமிலி’ என்றே அழைக்கும் அவர், குடும்பத்தினரும் அவ்வாறே அழைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.


தன் மகளை இளவரசியாக்கிய தந்தை - படங்கள் Reviewed by NEWMANNAR on July 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.