மன்னார் மற்றும் வவுனியா பாடசாலை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய முடிவு
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பிரகாரம் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர் ஜி.சசிகுமார் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பின் பிரகாரம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரவின் வழிகாட்டலில் வவுனியா மாவட்டத்தில் நகர்புறத்திலுள்ள பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகளில் திடீர் பரிசோதனைகளை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கடந்த வாரம் மேற்கொண்டிருந்தனர். இதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக அவருடன் தொடர்பு கொண்ட போதே சசிகுமார் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,,,,,,,,,,,,,,
இச்சோதனைகளின் மூலம் சில பிரபலமான பாடசாலைகளின் சிற்றுண்டிச்சாலைகள் உட்பட்ட பல பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்றல்,உற்பத்தி திகதியிடப்படாத பொருட்கள் விற்பனை,உற்பத்தியாளர் பெயர் முகவரியின்றி பொருட்களை விற்றல், காலாவதியான பொருட்கள் விற்றல் செயற்பாடுகள் எம்மால் அவதானிக்கப்பட்டது.
இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் 6 பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராகவும் மன்னார் மாவட்டத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலைக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் வவுனியா பாடசாலை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்ய முடிவு
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment