அண்மைய செய்திகள்

recent
-

நாங்கள் மீண்டும் சேருவதற்காகவே சாகிறோம்: காதலனின் உருக்கமான கடிதம்

புதுக்கோட்டை அருகே நேற்று ரயில் முன்பாய்ந்து காதலி தற்கொலை செய்து கொண்டதால் 6மணி நேரம் கழித்து காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பனையப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயா (22), ஒரு தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலையில் கல்லூரிக்கு செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட அவர், நமணசமுத்திரம் அருகே வந்த பயணிகள் ரயில் முன்பாய்ந்து இறந்துள்ளார். 

 இதைத்தொடர்ந்து காரைக்குடி ரயில்வே பொலிஸ் சம்பவ இடத்துக்கு வந்து மாணவி ஜெயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியபோது, அந்த இடத்தில் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், அண்ணன் நன்றாக சம்பாதித்து அம்மாவையும், அப்பாவையும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனக்கு கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டார். 

 ஆனால் என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது. எனவே அம்மா, அப்பாவை நல்லபடியாக பார்த்துக்கொள் என்று எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்னமராவதி அருகே உள்ள பழையப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (29) என்ற பொறியியல் பட்டதாரி, நேற்று மாலை 4 மணியளவில் கீரனூர் கிழக்கு ரயில்வே கேட் அருகில் சென்ற ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை ரயில்வே பொலிஸ், சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரச மருத்துவமனைக்கு அனுப்பியபோது, அதேஇடத்தில் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.  அதில், என்னுடைய பெயர் சுப்பிரமணி, என் சாவுக்கு யாரும் காரணம் காரணம் இல்லை, இதை சுயநினைவோடு எழுதுகிறேன். ஜெயா என்னுடைய மனைவி, அவள் காலையில் மனசு தாங்காமல் இறந்து விட்டாள். இதனால் அதை நினைத்து நினைத்து சாவதை விட ஒரே அடியாக சாகலாம் என்று முடிவு எடுக்கிறேன். ஜெயாவை சிறு வயதில் இருந்தே தெரியும், அம்மாதான் அவளுக்கு எல்லாம். நாங்கள் 2 பேரும் மறுபடியும் பிறந்து வருவோம். 

அதனால்தான் இப்போது இந்த முடிவை எடுத்தோம். எங்களை மன்னித்து கொள்ளுங்கள், இப்போது எங்களால் நிம்மதியாக வாழ முடியாததால், இந்த முடிவை எடுத்துள்ளோம். அடுத்த ஜென்மத்திலாவது நன்றாக வாழ்வோம். எங்கள் 2 பேரின் உடலையும் காளி கோவில் அருகே எரிக்க வேண்டும், அது எனது அப்பாவுக்கு தெரியும், இந்த உறவு என்றும் முடியாது. ஜென்மம், ஜென்மமாக தொடரும் இந்த பந்தம் நாங்கள் சாவதால் முட்டாள் இல்லை, நாங்கள் மறுபடியும் சேர்வதற்காக சாகிறோம் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், இதைத்தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஜெயாவும், சுப்பிரமணியும் காதல் ஜோடி என்பது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
நாங்கள் மீண்டும் சேருவதற்காகவே சாகிறோம்: காதலனின் உருக்கமான கடிதம் Reviewed by NEWMANNAR on July 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.