ஒரே இரவில் ரத்த நிறத்தில் மாறிய நதி அச்சத்தில் மக்கள்-படங்கள்
சீனாவில் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்த நதி ஒன்று ஒரே இரவில் இரத்த நிறமாக மாறியுள்ளது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள Wenzhou என்ற நகரில் உள்ள நதியில் எப்பொழுது வற்றாமல் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த பகுதியினர் குடிப்பது முதல் மற்ற அனைத்து உபயோகத்திற்கும் இந்த ஆற்றின் தண்ணீரைத்தான் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த நதியில் ஓடும் தண்ணீர் ஒரே நாள் இரவில் திடீரென ரத்தக்கலரில் செக்கச செவேலென மாறிவிட்டது.
முந்திய நாள் இரவில் நார்மலான நிறத்தில் இருந்த தண்ணீர் ஒரே நாள் இரவில் எப்படி நிறம் மாறியது என்று புரியாமல் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, அதிகாலை நான்கு மணியளவில் தண்ணீரின் கலர் நார்மலாகத்தான் இருந்தது என்றும் காலை ஆறுமணியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி சில நிமிடங்களில் ஆற்றின் தண்ணீர் முழுவதும் ரத்த நிறத்தில் மாறிவிட்டது என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு இதுமாதிரியான நிகழ்ச்சி சீனாவில் உள்ள எந்த நதியிலும் ஏற்பட்டது இல்லை என்றும், இது ஏதோ சாத்தானின் சூழ்ச்சி என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் இந்த ஆற்றின் தண்ணீரை எடுத்து ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து வருகின்றனர். இந்த ஆற்றின் கரையில் ஏராளமான தொழிற்சாலைகள் அதன் கழிவுகளை கலந்து வருகின்றன என்றும், ஏதோ ஒரு கெமிக்கல் ரியாக்சன் இந்த நிறம் மாறுதலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஒரே இரவில் ரத்த நிறத்தில் மாறிய நதி அச்சத்தில் மக்கள்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment