மன்னார் உட்பட வட கிழக்கில் போலி முகப்பூச்சு விற்பனை - இருவர் கைது
பிரபல அழகுசாதன முகப்பூச்சு நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு வடக்குஇ கிழக்கு பிரதேசங்களில் முகப்பூச்சுக்கள் (கிறீம்) விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பிலான பாரிய மோசடி ஒன்றை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, கிளி நொச்சி, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் கிழக்கில் மூதூர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளி
லும் இவ்வாறாக போலியாக தயாரிக்கப்பட்ட முகப்பூச்சுக்கள் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களில் ஒருவர் திருகோணமலை, தம்பலகாமம் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும் குறிப்பிட்ட பொலிஸார் மிக திட்டமிட்ட முறையில் இந்த மோசடி வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக சந்தேகம் வெளியிட்டனர்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள ஆயிரக்ககணக்கான போலி முகப் பூச்சு பக்கட்டுக்களுக்கும் உண்மையான பக்கட்டுக்களுக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்களை இதன் போது அவதானித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் கேசரிக்கு தகவல் வழங்கிய பொலிஸ் அதிகாரி ஒருவர், அசல் பக்கட்டில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள பெண்ணின் உருவத்திற்கும் போலி பக்கட்டில் காட்டப்பட்டுள்ள பெண்ணின் உருவத்துக்கும் இடையே நிற வேறுபாடுகளை தெளிவாக அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் பக்கட்டில் உள்ள இலச்சினையும் வித்தியாசமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திலும் வேறுபாடுகளை காண முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.
குறித்த அசல் முகப்பூச்சு பக்கட்டுக்களில் அரபு மொழி மூலமாகவும் விளக்கங்கள் எழுதப்பட்டுள்ள நிலையில் போலி பக்கட்டுக்களில் அதனை காணமுடிவதில்லை எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் இது தொடர்பில் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ள சந்தேக நபர்கள் இருவரும் தாம் இந்த முகப் பூச்சு பக்கட்டுக்களை கொழும்பிலிருந்தே கொண்டுவந்து விற்பனைக்காக சந்தையில் விட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் பொலிஸாரின் தகவல்படி இந்த போலி வர்த்தக நடவடிக்கை காரணமாக யாழ்பாணத்தில் மட்டும் அசல் முகப் பூச்சினை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு சுமார் 6 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த போலி வர்த்தகநடவடிக்கைகள் குறித்து பரந்த அளவில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் உட்பட வட கிழக்கில் போலி முகப்பூச்சு விற்பனை - இருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment