அதிக சத்துக்களை கொண்ட காரல் மீன்
பெண்கள் மகப்பேறு காலத்திலும், தாய்ப்பால் சுரக்கவும் காரல் மீனை அவித்து, சாறு எடுத்துக் குடிப்பது வழக்கமான ஒன்று.
அதுபோல மீன் சொதிகளில் காரல் மீன் சொதி நல்ல சத்துக்களை வழங்கக் கூடியது.
இதோ காரல் மீன் சொதி,
தேவையான பொருட்கள்
காரல் - அரை கிலோ
தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 3
சீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள் தூள் - தலா 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் - 1
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை, உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தேங்காயைத் துருவி, இரண்டு முறை பால் எடுக்கவும். இரண்டாவது முறையாக எடுத்த தேங்காய்ப் பாலுடன் சீரகத் தூள், சோம்புத் தூள், மஞ்சள்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சுத்தம் செய்யப்பட்ட காரல் மீன் இவற்றுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாகக் கொதித்ததும் முதலில் எடுத்த தேங்காய்ப் பாலைச் சேர்த்து இறக்கவும். எலுமிச்சம்பழத்தை ருசிக்கு ஏற்பப் பிழியவும்.
தாளிப்புச் சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்பு மூன்றையும் சேர்த்துத் தாளித்து, சொதியில் ஊற்றினால் சுடச் சுட காரல் மீன் சொதி தயார்.
அதிக சத்துக்களை கொண்ட காரல் மீன்
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:


No comments:
Post a Comment