மன்னாரில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு- படங்கள்
மன்னாரில் திடீர் என பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதோடு மரக்கறி வகைகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மன்னார் சந்தைகளில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையும்,ஒரு கிலோ இஞ்சி 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதே வேளை மரக்கறி வகைகளின் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ கறி மிளகாய் 300 ரூபாவிற்கும்,ஒரு கிலோ கரட் 180 ரூபாவிற்கும்,ஒரு கிலோ உருளைக்கிழங்கு 140 ரூபாவிற்கும்,ஒரு கிலோ தக்காளி 200 ரூபாவிற்கும் தற்போது மன்னார் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூர் உற்பத்தி நடவடிக்கைகள் குறைவடைந்த நிலையில் உள்ளதாகவும் குறிப்பாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் உள்ளூர் உற்பத்திச் செய்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் பச்சை மிளகாய்,கறி மிளகாய்,பயிற்றங்காய்,பெரிய வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு மரக்கறி வகைகள் தென் பகுதியில் இருந்து தரிவிக்கப்படுகின்றது.
இதனால் தற்போது தென் பகுதியில் இயற்கை அனர்த்தங்களின் காரணமாக மரக்கறி வகைகளின் விலை அதிகரித்துள்ளமையினால் அதனை கொள்வனவு செய்து மன்னாரில் கூடிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-எனவே மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூர் மரக்கறி உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும்,குறித்த உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை உரிய வகையில் உரிய விலைக்கு சந்தைப்படுத்துவதன் மூலம் மன்னாரில் மரக்கறி வகைகளின் விலையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என உள்ளூர் உற்பத்தியளர்களும்,வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு- படங்கள்
Reviewed by Admin
on
July 06, 2014
Rating:

No comments:
Post a Comment