விடத்தல் தீவு விளையாட்டு மைதானம் தொடர்பில் வெளிவந்த செய்திக்கும் எமக்கும்தொடர்பில்லை-கிராம மக்கள்
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விடத்தல் தீவு கிராமத்தில் மாந்தை மேற்கு பிரதேச சபையினால் பல இலட்சம் ரூபாய் செலவில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள போதும் குறித்த விளையாட்டு மைதானத்தின் நடுவில் மாடுவெட்டும் கொல்களம் காணப்படுவதாகவும் இதனால் விளையாட்டு வீரர்கள் பல
அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைஏற்பட்டுள்ளதாக அண்மையில்
செய்திகள் வெளியாகி இருந்தது.
குறித்த செய்தியில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவரின் செயற்பாடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. குறித்தசெய்தியானது விடத்தல் தீவில் உள்ள ஒரு சிலரினால் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவருக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட செய்தி என விடத்தல் தீவு கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இச் செய்திக்கும் விடத்தல் தீவு கிராம மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விளையாட்டு மைதானத்தின் நடுவே காணப்படும் மாடு வெட்டும் கொல்களம் அகற்றுவது தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேசசபை உரிய தரப்பினரிடம் ஆலோசனைகளை பெற்று வருகின்றது.
-எனவே தனிப்பட்ட சமூக விரோதிகளினால் வெளியிடப்பட்ட இச் செய்திக்கும், விடத்தல் தீவு கிராம மக்களுக்கும் எவ்வித தொடர்பும்இல்லை என விடத்தல் தீவு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
விடத்தல் தீவு விளையாட்டு மைதானம் தொடர்பில் வெளிவந்த செய்திக்கும் எமக்கும்தொடர்பில்லை-கிராம மக்கள்
Reviewed by NEWMANNAR
on
July 06, 2014
Rating:

No comments:
Post a Comment