பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திரைஸ்தலங்களில் ஒன்றான பெரிய கட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(25-07-2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து மாலை நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.ஓகஸ்ட் 3 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பட்டில் செட்டிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்சான்டர் சில்வா இத்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெரியகட்டு தூய அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம்.
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:
No comments:
Post a Comment