அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உயிலங்குளம் பாடசாலை மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்-படங்கள்

மன்னார் உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இன்று வியாழக்கிழமை காலை தனியார் பேரூந்து ஒன்றை இடை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டிருந்தது.

பாடசாலை மாணவர்களை கடந்த சில தினங்களாக குறித்த தனியார்      பேரூந்து ஏற்றாமல் செல்வதினை கண்டித்தே குறித்த வீதி மறியல் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.

மன்னாரில் இருந்து காலை 7.20 மணிக்கு மடு நோக்கி புறப்படும் குறித்த தனியார் பேரூந்து ஒன்று உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு வருவதற்காக சிறுநாவற்குளம்,கள்ளிக்கட்டைக்காடு,நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் பேரூந்திற்காக காத்து நிற்கும் மாணவர்களை ஏற்றாது கடந்த சில தினங்களாக சென்றுள்ளது.

இதனால் நுற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் பாரிய சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

-இந்த நிலையில் இன்று வியாழககிழமை காலை 7.20 மணியளவில் மன்னாரில் இருந்து மடுவிற்கு குறித்த தனியார் பஸ் புறப்பட்ட போதும் மாணவர்களை ஏற்றாது சென்றுள்ளது.

-இந்த நிலையில் உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த பேரூந்தை உயிலங்குளம் சந்தியில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-பின் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கதைத்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் சுமார் ஒரு மணித்தியாலம் தாமதத்தின் பின்பே குறித்த பேரூந்து மடுவை சென்றடைந்தது.


மன்னார் உயிலங்குளம் பாடசாலை மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்-படங்கள் Reviewed by NEWMANNAR on July 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.