தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம்-முன்னாயத்தங்கள் தொடர்பில் மீளாய்வு - படங்கள்
தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னாயத்தங்கள் தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று புதன் கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரிய தலமையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் மேலதி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி மேல், உதவி மாவட்ட செயலாளர் எஸ். பரமதாஸ்; உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் வருடந்தோறும்'தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம்அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வருடத்திற்கான 'தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம்' இம்மாதம் (யூலை) 14ம் திகதி தொடக்கம் 20ம்திகதி வரையில் இடம்பெற இருக்கின்றது.
குறித்த 'தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம்'தொடர்பிலான மன்னார் மாவட்ட நிகழ்வுகள் பள்ளிமுணை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னாரில் இடம்பெற இருக்கும் மேற்படி 'தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னாயத்தங்கள் தொடர்பில் ஆராயும் மீளாய்வு கலந்துரையாடல் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்படி நிகழ்விற்கு அணுசரனை வழங்கும் ஐ.நாவின் தன்னார்வ தொண்டுப்பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சமூக ஒருமைப்பாட்டு வாரம்-முன்னாயத்தங்கள் தொடர்பில் மீளாய்வு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment