மன்னாரில் விசேட இப்தார் நிகழ்வு-படங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் கிளை ஏற்பாடு செய்திருந்த 'இப்தார்' நிகழ்வு அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் பிரதி நிதியாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் இந்து , பௌத்த மதத்தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதே வேளை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேசச் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள்,அமைச்சரின் செயலாளர்கள்,இணைப்புச் செயலாளர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் இன,மத வேற்றுமையின்றி குறித்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் விசேட இப்தார் நிகழ்வு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 09, 2014
Rating:
No comments:
Post a Comment