வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டல்
வவுனியா மாவட்ட நீதிமன்றத்துக்கான புதிய கட்டத்துக்கு அடிக்கல் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸினால் வியாழக்கிழமை நாட்டப்பட்டது.
வவுனியா நீதிமன்ற கட்டடத்தொகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதவான் கே.சிவபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் க.தயாபரன், ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம், சிரேஷ்ட சட்டத்திரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன், இங்கு பிரதம நீதியரசரால் ஞாபகார்த்தமாக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டல்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment