அண்மைய செய்திகள்

recent
-

உழவு இயந்திரத்தின் சில்லில் அகப்பட்டு ஒருவர் பலி

உழவு இயந்திரத்தின் சில்லில் அகப்பட்ட ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் கிளிநொச்சி உதயநகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீட்டுக் கட்டுமானப்பலகைகளை ஏற்றிச் சென்று வீட்டின் முன்னால் உழவு இயந்திரத்தை நிறுத்தி விட்டு இறங்கிச் சென்று வாசல் கதவை திறக்க முற்பட்டுள்ளார். 

 அப்போது உழவு இயந்திரம் தானாக நகரவே பிரஸ்தாப நபர் ஓடிச் சென்று நிறுத்தமுற்பட்ட வேளை அவர் அணிந்திருந்த சாரம் சில்லுனுள் சிக்குண்டதில் அவர் கீழே விழுந்துள்ளார். 

 இந்நிலையில் உழவு இயந்திரத்தின் பின் சில்லு குறித்த நபர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச் சம்பவத்தில் கிளிநொச்சி இரத்தினபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முத்தையா இராசேந்திரன் (வயது 49) என்பவரே இறந்தவராவார்.
உழவு இயந்திரத்தின் சில்லில் அகப்பட்டு ஒருவர் பலி Reviewed by NEWMANNAR on July 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.