முசலி பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் பல அபிவிருத்தி தொடர்பாக மீளாய்வு - படங்கள்
முசலி பிரதேச ஒருங்கிணைப்பு குட்டம் பல அபிவிருத்தி தொடர்பாக மீளாய்வு
மன்னார்.முசலி பிரதேச ஓருங்கணைப்பு கூட்டம் செவ்வாய் கிழமை (8) முசலி பிரதேச செயலக கட்ட கேட்போர் கட்டிடத்தில் வன்னி அபிவிருத்தி குழு தலைவரும் வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியுதின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பாகவும் அதே போன்று இன்னும் நிறைவடையாமல் இருக்கின்ற பல வேலைகளின் குறைபாடுகள் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டன அதில் கடந்த பல மாதகாலமாக இன்னும் நிறைவடையாமல் இருக்கின்ற வெளிமலை இருந்து பண்டாரவெளி செல்லும் தார் வீதி பற்றி கவனம் செலுத்துவது பற்றி பேசப்பட்டன. அத்துடன் முசலி பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பிரதானமான குடி நீர் பிரச்சினை பற்றியும் அதிகமாக பேசப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு அமைச்சர் கொண்டுவந்தார்.
குறித்த கூட்டத்தில் அமைச்சருடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் முசலி பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன்.வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாருக் .ஆதம்பாவா பாருக் பாராளுமன்ற உறுப்பினர்.வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதீயுதின்.முசலி பிரதேச சபை தவிசாளர் ஏஹியா பாய்.சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர்கள் வருகைதந்து இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
முசலி பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் பல அபிவிருத்தி தொடர்பாக மீளாய்வு - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 10, 2014
Rating:

No comments:
Post a Comment