திருமலையில் ஆணின் சடலம் கரையொதுங்கியது
திருகோணமலை, கோட்டை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, வித்தியாலய ஒழுங்கை என்ற விலாசத்தைச் சேர்ந்த நாராயணபிள்ளை பாஸ்கரநாதன் வயது (62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது நெருங்கிய உறவுகள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் இவர் திருகோணமலையில் தனியாக வசித்து வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பில் வசித்து வருவதாக கூறப்படும் இவரது மற்றுமொரு உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் திருகோணமலை, துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமலையில் ஆணின் சடலம் கரையொதுங்கியது
Reviewed by NEWMANNAR
on
July 20, 2014
Rating:
No comments:
Post a Comment