அண்மைய செய்திகள்

recent
-

மருந்தாகும் மலர்கள்

ஏராளமான மலர்கள் வாசனைத்திரவியங்கள் தயார் செய்வதற்கும், அலங்காரப்பொருட்களாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற மருத்துவ பலன்களையும் அள்ளித்தருகிறது.

அந்த வகையில் மருந்தாக பயன்படும் சில மலர்கள்,


ஆவாரம் பூ


ரத்தத்துக்கு மிகவும் பயன்தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல்சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.

ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.




நெல்லிப்பூ

உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச்சிக்கலுக்கு இது உகந்தது.



செம்பருத்திப்பூ

இருதய பலவீனமடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.




ரோஜாப்பூ

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும்.



மருந்தாகும் மலர்கள் Reviewed by NEWMANNAR on July 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.