வவுனியாவில் ஏற்றுமதி பயிராக மாறியுள்ள பப்பாசி செய்கை வறட்சியால் பாதிப்பு
பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த பப்பாசியின் பிறப்பிடம் அமெரிக்காவின் அயனமண்டல பிரதேசமாகும்.
இதன் மகத்தான குணமறிந்து இன்று பல்வேறு நாடுகளிலும் பயிரிடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் பப்பாசி செய்கை அதிகரித்து வருவதோடு இது மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதார தொழிலாகவும் காணப்படுகின்றது.
எனினும் தற்போது கடும் வெப்பம் நிலவுதால்- நோய்த்தாக்கம் மற்றும் நீர் பற்றாக்குறை என்பன ஏற்பட்டு பப்பாசி செய்கை வெகுவாக குறைந்துள்ளது.
மீள்குடியேறிய பகுதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பப்பாசி செய்கையானது அம்மக்களின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகித்து வந்தது.
இந்நிலையில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக பப்பாசி செய்கையாளர்கள் பாரிய பொருளாதார இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு செய்கை பண்ணப்பட்ட பப்பாசி செய்கையானது தற்போது உள்ளூரிலும் பெரும் கிராக்கியாக உள்ள நிலையில் வறட்சியின் தாக்கம் செய்கையாளர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் தமக்கான மாற்றுத் திட்டங்களை வழங்குவது தொடர்பில் விவசாய திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென பப்பாசி பயிர்ச்செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஏற்றுமதி பயிராக மாறியுள்ள பப்பாசி செய்கை வறட்சியால் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment