பிரான்ஸில் இரு புகையிரதங்கள் மோதி விபத்து:40பேர் காயம்
தென் பிரான்ஸில் இரு புகையிரதங்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 40பேர் காயமடைந்துள்ளனர்.
தென் மேற்கு பிரான்ஸ் நகரான பயுபேயொன்னில் அதிவேக ரிஜிவி புகையிரதமும் பிராந்திய ரொ புகையிரதமும் மோதிக்கொண்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற வேளை அதிவேக புகையிரதத்தில் 178 பேரும் பிராந்திய புகையிரதத்தில் 70 பேரும் பயணித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்து இடம்பெற்றவேளை அதிவேக புகையிரதம் வேகமாக செல்லாது அசைந்து கொண்டிருந்தமை காரணமாகவே உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரான்ஸில் இரு புகையிரதங்கள் மோதி விபத்து:40பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
July 20, 2014
Rating:

No comments:
Post a Comment