மூதூரில் ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள சம்பூர் தங்கவேலாயுதபுரம் பகுதியில் ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் இன்று உயிரிழந்துள்ளனர்.
மாடு மெய்ப்பதற்காக சென்ற ஐந்து சிறுவர்கள் இன்று பிற்பகல் ஆற்றில் மூழ்கியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அவர்களில் மூவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
சம்பவத்தில் புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் ஒன்பது வயதான இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூதூரில் ஆற்றில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
July 28, 2014
Rating:

No comments:
Post a Comment