பிரேசிலில் விமான விபத்து
பிரேசில் ஜனாதிபதி வேட்பாளர் டுஆர்டூ கம்போஸ் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து தேசிய ரீதியில் மூன்று நாள் துக்க தினத்தை ஜனாதிபதி டில்மா ரூசெப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் தேர்தல் பிரசாரங்களையும் இடைநிறுத்தியுள்ளார்.
சாவ் போலோ மாநிலத்திலுள்ள சன்டோஸ் நகரில் சீரற்ற வானிலை காரணமாக கம்போஸ் பயணித்த விமானம் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
விமானம் அப்பகுதியில் இருந்த வீடுகள் மீது விழுந்துள்ளது. இதில் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. விமானம் விழுந்த பகுதியில் நின்ற 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் நான்கு பயணிகளும் விமானிகள் இருவரும் பலியாகியுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கம்போஸ்சின் உயிரிழப்புக்கு பிரேசிலின் உப ஜனாதிபதியும் தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரேசிலில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் விமான விபத்து
Reviewed by NEWMANNAR
on
August 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 14, 2014
Rating:


No comments:
Post a Comment