அண்மைய செய்திகள்

recent
-

காலணியும் ஒரு காவல் கருவிதான்!

ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்கள் காலணியைக் கொண்டு தங்களை காத்துக்கொள்ளும் புதிய நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் பள்ளி மாணவிகள். தானே மராத்தி மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் நால்வரின் புதிய கண்டுபிடிப்புதான் இந்த காலணி ஆயுதம். வழக்கமாக பெண்கள் அணியும் காலணியின் அடிப்பாகத்தில் சில கருவிகளை இணைத்துள்ளனர். 

 விஷம எண்ணத்துடன் அருகில் நெருங்கும் ஆண்களின் காலை இந்த காலணி அணிந்திருக்கும் பெண்கள் வேகமாக மிதித்தால் போதும்... அந்த நபர் மயக்கமடையும் அளவுக்கு மின்சாரம் அவர் உடலில் பாய்ச்சப்படும். அல்லது ஆபத்து அருகே வரும் போது காலணியை வேகமாக தரையில் மிதிக்கலாம்.

 அதன்பிறகு பெண்ணின் கைப்பை அல்லது பர்ஸில் இணைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் அலாரம் ஒலி எழுப்பத் தொடங்கிவிடும். அத்துடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் சில செல்போன் எண்களுக்கு உடனே எஸ்.எம்.எஸ். சென்று விடும். ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாக்கும் இந்த காலணிக்கு பெரும் வரவேற்பு எழுந்துள்ளது!
காலணியும் ஒரு காவல் கருவிதான்! Reviewed by NEWMANNAR on August 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.