அண்மைய செய்திகள்

recent
-

சண்டியர் விமர்சனம்


அரசியல் ஆசையில் அதகளம் பண்ணும் இளைஞன், அதே அரசியலால் சரிந்து விழுவதுதான் சண்டியர். தஞ்சாவூரின் சிறு டவுண் ஒன்றில் பெரியார் கொள்கை பேசி அலைந்துகொண்டிருக்கும் ஜெகனுக்கு, சேர்மன் சேர் மீது பேராசை. அதற்கு குறுக்கே நிற்பது அவர் அப்பாவின் நண்பரும் அவர் மகன் சிட்டிங் சேர்மனும். அவர்களைக் கவிழ்த்துவிட்டு அந்த சேரைப் பிடிக்க நடத்தும் வெட்டுகுத்து ஆட்டமும் அந்த ஆட்டத்துக்குள் நடக்கும் மென்மை காதலும்தான் கதை. லோக்கல் சண்டியராக ஜெகன். தெனாவட்டு, பகைப் பார்வை, பதவி வெறி, ஆக்ரோஷம், ஆவேசம், சூது என அழகாக எக்ஸ்பிரஷன் காட்டுகிறார் அசலாக. இன்னைக்கு வெள்ளிக்கிழமை முட்டை சாப்பிடக்கூடாதுடா என்கிற அம்மாவிடம், அதை உடைச்சுப்பாரு. இன்னைக்கு உடையலைன்னா வேண்டாம் என்று நாத்திகம் பேசும்போதும், சேர்மனை போடுவதற்கு போய்விட்டு கரும்புக்காட்டில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போதும் சேர்மன் வீட்டுப் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கும்போதும் கவனிக்க வைக்கிறார் ஜெகன். 


முரட்டு பார்ட்டி என்றாலும் காதல் காட்சிகளிலும் உம்மென்று இருக்க வேண்டுமா என்ன? புதுமுகம் கயல், ஹீரோவை காதலிப்பதற்காக உருவாக்கப்பட்ட பாவாடை, தாவணி ஹீரோயின். ஹீரோவால் கொடுக்கப்பட்ட போண்டாவை பாதுகாத்து மறுநாள் அவன் முகத்தில் வீச வேண்டும் என்று நினைக்கும்போது நடக்கும் கலாட்டா, ரசனை. நீ என்னை ஏமாத்தறதுக்காக காதலிச்சாலும் நான் உன்னை நிஜமாவே காதலிக்கிறேன். அந்த காதலுக்கு உண்மையா இருப்பேன் என்கிற அவரது பாசத்தில் அறிமுகம் தாண்டி தெரிகிறது அனுபவ நடிப்பு. பெரிய மனிதர்களான வெங்கடேசனும் ரவியும் யதார்த்தமான தஞ்சாவூர்க்காரர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும் வெற்றிலையை குதப்பிக்கொண்டு, காலை இழுத்துப் போட்டு நடக்கும் ரவி, கண்களாலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார்.  சிங்கம்புலி சில நேரங்களில் சிரிக்க வைக்கிறார். 

நண்பர்களாக வரும் முருகதாஸ், பெரிய மீசையை வைத்துக்கொண்டு வீராப்பு பேசும் நாயகம் அனைவரும் கச்சிதமான தேர்வு. யத்தீஷ் மகாதேவின் பின்னணி இசை படத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்கிறது. ஹரி பாஸ்கரின் ஒளிப்பதிவு தஞ்சாவூரின் வயக்காட்டையும் வஞ்சத்தையும் ரம்மியமாகக் காட்டுகிறது. மணல் பிரச்னையில் இருந்து மது பிரச்னை வரை சகலத்தையும் சொல்லி யாரென்று கேட்க வைக்கிறார் அறிமுக இயக்குனர். ஆனால், முதல் பாதியில் இருந்த மாதிரி இரண்டாம் பாதி திரைக்கதையையும் இறுக்கி பிடித்திருந்தால், சண்டியருக்கு கம்பீர சல்யூட் அடித்திருக்கலாம்.

சண்டியர் விமர்சனம் Reviewed by NEWMANNAR on August 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.