கார்த்தியுடன் இணைகிறார் ஸ்ருதி
கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ஸ்ருதி ஹாசன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கியவர் கோகுல்¢. இவர் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க பேச்சு நடக்கிறது.
நகரத்து பின்னணியில் உருவாகும் இந்த பட கதையில் ஹீரோயினுக்கு மாடர்ன் கேர்ள் வேடம் என்பதால் ஸ்ருதிதான் இதற்கு பொருத்தமாக இருப்பார் என பட யூனிட்டார் முடிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு முழுவதும் கால்ஷீட் டைரி ஃபுல் ஆக இருந்தாலும் இந்த படத்தில் நடிக்க ஸ்ருதி ஆர்வம் காட்டுகிறாராம்.
இந்தி, தெலுங்கில் நடித்தபடியே விஷால் ஜோடியாக பூஜை படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ருதி. எல்லா மொழிக்கும் முக்கியத்துவம் தந்து நடிக்கவே அவர் விரும்புகிறாராம்.
கார்த்தியுடன் இணைகிறார் ஸ்ருதி
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2014
Rating:


No comments:
Post a Comment