மணம் கொண்ட காதல் பாடல் வெளியீடு
ரித்திஷ் ஹரிஷ் மூவீஸ் சார்பில் முத்துராம் தயாரித்து, நடிக்கும் படம், மணம் கொண்ட காதல். நோபியா, ஸ்ரியா ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். எம்.எஸ்.அண்ணாதுரை ஒளிப்பதிவு செய்கிறார், புகழேந்திராஜ் இயக்கி உள்ளார்.
விக்ரம் வர்மன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு வெளியிட, பெப்சி முன்னாள் தலைவர் வி.சி.குகநாதன் பெற்றார்.
விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, இயக்குனர் அரவிந்த்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்யாணத்துக்கு முன்னால் காதலிப்பது உணர்ச்சிபூர்வமானது. கல்யாணத்துக்கு பிறகு மனைவியைக் காதலிப்பதுதான் உணர்வுபூர்வமான காதல். இதை வலியுறுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது என்றார் இயக்குனர்.
மணம் கொண்ட காதல் பாடல் வெளியீடு
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:


No comments:
Post a Comment