அண்மைய செய்திகள்

recent
-

எபோலா தொற்றுநோய் வேகமாக பரவுவதால் சர்வதேச அளவில் அவசரநிலை பிரகடனம்

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவிவரும் எபோலா தொற்றுநோயால் பலியாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதை அடுத்து, எபோலாவை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ.) அறிவித்தது. அவசர நிலையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உலகெங்கும் மக்கள் பயணம் மேற்கொள்வதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

 ஜெனீவாவில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற தீவிர ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும் என்று அமைப்பின் இயக்குநர் டாக்டர் மார்கரெட் சான் கோரிக்கை விடுத்தார்.

 கடந்த 40 ஆண்டுகளில் உலகெங்கும் ஏற்பட்ட நோய்களில், மிகவும் தீவிரமானதாக எபோலா உள்ளது. மிகவும் வேகமாக பரவிவருகிறது என்றார் சான். எபோலா நோய் மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவுவதை தவிர்க்க முடியாது என்று அமெரிக்க சுகாதார ஆணையம் நேற்று முன்தினம் கூறியது. இந்நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு, அவசரநிலையை அறிவித்துள்ளது. 

 லைபீரியா, கினியா, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் இந்த தொற்று நோய்க்கு இதுவரை 1000 பேர் பலியாகி உள்ளனர். 1700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தாக்கினால் வாந்தி, மயக்கம், உடல்வலி ஏற்படும். எபோலா வைரஸ் கிருமியால் பாதிக்கப்படுவோரில் உயிரிழப்பு விகிதம் 55 சதவீதமாக உள்ளது குறிப்பிடதக்கது.
எபோலா தொற்றுநோய் வேகமாக பரவுவதால் சர்வதேச அளவில் அவசரநிலை பிரகடனம் Reviewed by NEWMANNAR on August 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.