அண்மைய செய்திகள்

recent
-

தன்னுடைய ஆபாச படங்களை நீக்க மறுத்த ஃபேஸ்புக்கிற்கு எதிராக பெண் ஒருவர் வழக்குத் தாக்கல்

தன்னை பழிவாங்க தனது முன்னாள் காதலன் வெளியிட்ட ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அமெரிக்கா டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் மரியம் அலி. 

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இலினாய்ஸைச் சேர்ந்த ஆதீல் ஷா என்பவரை காதலித்துள்ளார். இருவரும் பிரிந்த பிறகு கான் மரியமின் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கினை உருவாக்கி அதில் மரியமின் ஆபாச புகைப்படங்களை தரவேற்றியுள்ளார். 

 இதேவேளை, கான் தன்னை பழிவாங்கவே போலியாக தன்னை போன்ற உருவம் கொண்ட ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாகவும் மரியம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த புகைப்படங்கள் தன்னுடையது அல்லவெனவும், அந்த படங்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்குமாறும் மரியம் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எனினும் ஃபேஸபுக் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து அவர் தனது வேண்டுகோளை நிராகரித்த ஃபேஸ்புக் தனக்கு 12.3 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்னுடைய ஆபாச படங்களை நீக்க மறுத்த ஃபேஸ்புக்கிற்கு எதிராக பெண் ஒருவர் வழக்குத் தாக்கல் Reviewed by NEWMANNAR on August 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.