அண்மைய செய்திகள்

recent
-

சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் செல்லும் முல்லைத்தீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் போற்றுதலுக்கூரியவர்கள்-சிவசக்தி ஆனந்தன்.-படங்கள்

சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் செல்லும் முல்லைத்தீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் போற்றுதலுக்கூரியவர்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்தில் 2013 ஆம் ஆண்டு க.பொ.த உயரதரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய ஏழு மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே,,,

இந்தப் பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்கள் இறுதி யுத்தத்தின்போது மரணமடைந்துள்ளதுடன் பல மாணவர்கள் தமது தாயையோ தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துமுள்ளனர்.

 இப்பொழுது இந்தக் குழந்தைகளின் குடும்பத்தினர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்றனர். இந்தக் கிராமம் முழுவதுமே போரால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கடும் சவால்களுக்கு மத்தியில் இங்கு கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய மாணவர்கள் ஒவ்வொரு மாணவரும் போற்றப்பட வேண்டியவர்கள். 

இந்த மாணவர்களின் எதிர்காலக் கல்விச் செயற்பாட்டிற்குப் பொருளாதார உதவிகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எமது உறவுகள் அனைவருக்கும் உள்ளது. 

குறிப்பாக புலம்பெயர் உறவுகள் இவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

 இவர்களைப்போன்று வறுமையில் வாடும் ஆயிரக்கணக்கான வன்னி மாணவர்களுக்கும் எமது உறவுகள் மனமுவந்து உதவிகளைச் செய்வதற்கு முன்வரவேண்டும் என்றும் வேண்டுகின்றேன்.

பாடசாலை அதிபர் தெ.மங்களேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் அதிபரும் கோட்டக்கல்வி அதிகாரியுமான திரு.த.சிறிபுஸ்பநாதன் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 









சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் செல்லும் முல்லைத்தீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் போற்றுதலுக்கூரியவர்கள்-சிவசக்தி ஆனந்தன்.-படங்கள் Reviewed by NEWMANNAR on August 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.