தூக்கிட்டு பெண் தற்கொலை
மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
எருவில் கண்ணகி வித்தியாலயத்துக்கு அருகில் வசித்து வரும் இளையதம்பி யாழினி (வயது 31) என்பவரே தற்கொலை செய்து கொண்டவராவார்.
சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
இளையதம்பி யாழினியின் கணவர் கட்டாரில் தொழில் புரிந்து வருகிறார். அவருடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசியில் அவர் கதைத்துள்ளார். இந்நிலையில் அவரது பத்து மாதக்குழந்தை இரவில் எழுந்து அழுதுள்ளது.
குழந்தை அழுதும் தாய் எழும்பாத காரணத்தால் மற்றைய இரு குழந்தைகளும் எழுந்து பார்த்த போது தாய் தூக்கில் தொங்குவதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து வெளியில் உறங்கிக்கொண்டிருந்த தமது அம்மப்பாவிடம் அவர்கள் சென்று சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.
அவர் அறையை வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தூக்கிட்டு பெண் தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:

No comments:
Post a Comment