வரட்சியால் பாதிக்கப்பட்ட முசலி மக்களுக்கு குடி நீர் வினியோகம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்கள் குடி நீரை பெற்றுக்கொள்ளுவதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மக்களின் குடி நீர் பிரச்சினையினை தீர்த்து வைக்கும் முகமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹினைஸ் பாரூக் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுககுற்பட்ட காயக்குளி,சீனத் நகர் மற்றும் ஹீனைஸ் நகர் ஆகிய கிராமங்களை அண்டிய சுமார் 7 கிராமங்களுக்கு குடி நீர் வினியோகத்தைநேற்று ஞாயிற்றுக்கிழமை (24) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த வேலைத்திட்டம் அனர்த்த நிவாரண சேவை அமைச்சின் அனுசணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இன்று (24) ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம். றியாஸ் மற்றும் அக்கிராமங்களின் உள்ள கிராமிய அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
எனினும் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற போதும் முசலி பிரதேசச் செயலாளர் தொடர்ச்சியாக அசமந்தப் போக்குடன் நடந்து கொள்ளுவதாகவும்,அரசியல் வாதிகளினால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை முன் வைக்கின்ற போதும் வாக்குறுதிகள் எவற்றையும் நிறை வேற்றுவதில்லை என முசலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வரட்சியால் பாதிக்கப்பட்ட முசலி மக்களுக்கு குடி நீர் வினியோகம்.
Reviewed by NEWMANNAR
on
August 25, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment