அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு, திருகோணமலையில் கடும் வரட்சி; 1,60,000 குடும்பங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வரட்சியால் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 60 ஆயிரம் பேர் வரை வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சால்ர்ஸ் குறிப்பிடுகின்றார். 


 வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அடுத்த வாரம் தொடக்கம் 18 ஆயிரம் மெற்றிக்தொன் உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் விராஜ் திசாநாயக்க குறிப்பிட்டார்.

 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 25 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பு, திருகோணமலையில் கடும் வரட்சி; 1,60,000 குடும்பங்கள் பாதிப்பு Reviewed by NEWMANNAR on August 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.