அண்மைய செய்திகள்

recent
-

வாகன கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

கொழும்பு உள்ளிட்ட அண்மித்த பிரதேசங்களில் வாகன கடத்தலில் ஈடுபட்ட கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த மூவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்களால் கொள்ளையிடப்பட்ட இரண்டு வேன்களையும், கார் ஒன்றையும் கைப்பற்றுவதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றை நீர்கொழும்பு பகுதியிலும், வெள்ளவத்தை மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் இரண்டு வேன்களையும் சந்தேகநபர்கள் கடத்தியுள்ளனர்.

 கைதானவர்கள் எம்பிலிபிட்டிய, ஹோமாகம மற்றும் மீகொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களால் கடத்தப்பட்ட வாகனங்களின் மொத்த பெறுமதி 163 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
வாகன கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது Reviewed by NEWMANNAR on August 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.