அண்மைய செய்திகள்

recent
-

இரண்டாம் தர அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் விடத்தல்தீவு யுனைற்றட் அணி அசத்தல்-Photo

மன்னார் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட 'B' Division அதாவது இரண்டாம் தர அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான ஆட்டம் 17.08.2014 இன்று முடிவுக்கு வந்தது.16 அணிகள் இதில் பங்குபற்றியது. 17.08.2014 இன்று இச்சுற்றின் இறுதிப்போட்டியானது மன்னார் பொது விளையாட்டரங்கில் முருங்கன் பொது சன வி க வுக்கும் விடத்தல்தீவு யுனைற்றட்ட வி க வுக்குமிடையே நடைபெற்றது.

 ஆயிரக்கணக்கான இரசிகர்கள் மத்தியில் மாலை 3.30 மணிக்கு இச்சுற்றுப்போட்டியின் போட்டியின் பிரதம விருந்தினராகிய சமூக சேவையாளர் திரு சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்களை இரு அணி வீரர்களும் லீக் நிர்வாகத்தினரும் வரவேற்று வீரர்களின் அறிமுகத்தை தொடர்ந்து 4.00மணிக்கு இறுதிப்போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த அணி வெல்லும் என தெரியாதவாறு இரு அணிகளும் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஆடிக்கொண்டிருந்தனர். 8ம் நிமிடத்தில் யுனைற்றட் அணியின் வீரர் நிதர்சன் தமது அணிக்காக முதலாவது கோலைப் போட  26ம் நிமிடத்தில் மீண்டும் யுனைற்றட் அணியின் வீரர் சுரேந் தமது அணிக்காக இரண்டாவது கோலை பெனால்டி முறையில் போட இடைவேளையின்போது ஆட்டம் 2-0 ஆக காணப்பட்டது. 

இரண்டாம் பாதியில் 50ம் நிமிடத்தில் மீண்டும் யுனைற்றட் அணியின் சார்பில் தீபன் மூன்றாவது கோலைப் போட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இருந்தும் முருங்கன் அணியினர் இறுதிவரை கடுமையாக போராடியும் ஆட்டம் 3-0 என்ற கோல் கணக்கில் முடிவுற்றது. 2014ம் ஆண்டிற்கான லீக்கின்  'B' Division கிண்ணத்தை விடத்தல்தீவு யுனைற்றட் வி க தனதாக்கிக் கொண்டது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த இப்போட்டியில் யுனைற்றட் வி க வானது அனைவரது பாராட்டையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்விரு அணிகளும்  'A' Division க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டியில் திரு சார்ள்ஸ் அவர்களுடன் மன்னார் நகர பிதா கௌரவ ஞானப்பிரகாசம் அவர்களும் மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சுக் அவர்களும் முன்னாள் விளையாட்டு வீரர் செல்வம் அண்ணன் அவர்களும் லீக் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். லீக் செயலாளர் திரு ஞானராஜ் அவர்களின் நன்றியுரையைத்தொடர்ந்து வெற்றிக்கிண்ணமும் பணப்பரிசும் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.












இரண்டாம் தர அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் விடத்தல்தீவு யுனைற்றட் அணி அசத்தல்-Photo Reviewed by NEWMANNAR on August 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.