'காஸா' மீதான தாக்குதல் முழு உலக முஸ்ஸீம்களுக்கும் எதிரான தாக்குதல்-மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்
ஐக்கிய நாடுகள் சபை காஸா மீதான தாக்குதல் விடயத்தில் பக்கச்சார்பற்ற முறையில் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் உப்புக்குளம் சன சமூக நிலையத்தில் நேற்று(17) இடம் பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே,,,,
அண்மையில் காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலை மனிதநேயமுள்ள அனைவராலும் மிகவும் கண்டிக்கத்தக்க துயரமான சம்பவமாகும்.
மேற்குலக நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.மேலும் பல நாடுகள் நடுநிலை வகிக்க தவறியதுடன் மௌனம் காப்பது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாக்குதலானது முஸ்ஸீம்களின் புனித மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இச் சம்பவம் மதச்சுதந்திரத்தை மீறும் செயலாகும்.
இத்தாக்குதலானது மக்களின் குடி மனைகள்,அகதி முகாம்,பாடசாலை,வணக்கஸ்தலங்கள் போன்றவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்களின் காரணமாக குழந்தைகள்,பெண்கள் என பலர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
யுத்த நிறுத்தத்தின் பின்பும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மொத்தத்தின் காஸா மீதான தாக்குதலானது உலக முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியுள்ளது.
நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையின் கடமையாகும்.என மன்னார் நகர சபை உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் மேலும் தெரிவித்தார்.
'காஸா' மீதான தாக்குதல் முழு உலக முஸ்ஸீம்களுக்கும் எதிரான தாக்குதல்-மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நகுசீன்
Reviewed by NEWMANNAR
on
August 18, 2014
Rating:
No comments:
Post a Comment