புதுடில்லிக்கு பயணமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்திய தலைநகர் புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யுஎல்195 விமானத்தின் மூலம் பயணமானது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜா மற்றும் சுபாஸ் சந்திரன் ஆகியோரடங்கிய அறுவர் கொண்ட உயர் மட்டக்குழுவே பயண மேற்கொண்டுள்ளது.
புதுடில்லி செல்லும் இவ்வுயர் மட்டக்குழுவானது நாளை வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாசுவராஜை சந்திக்கவுள்ளது. மறுநாள் சனிக்கிழமையன்று இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியுடன் கூட்டமைப்பு முதன்முதலாக விசேட சந்திப்பில் பங்கேற்கவுள்ளது. அத்துடன் குறித்த காலப்பகுதியில் புதிய இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளுடனும் விசேட பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்ளவுள்ளது.
புதுடில்லிக்கு பயணமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 21, 2014
Rating:

No comments:
Post a Comment