அண்மைய செய்திகள்

recent
-

சிறுமி ஒருவரை தூக்கி செல்ல முயன்ற அதிசய பறவை

அதிசய பறவையொன்று தரம் மூன்றில் கல்வி பயிலும் சிறுமியொருவரை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவமொன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று அனுராதபுரம் மாவட்டத்தில் திருப்பனை எனும் பகுதியில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாலினி வாசன என்ற சிறுமியை ஆறடி சிறகும் நான்கு அடி உயரமும் கொண்ட அதிசய பறவை ஒன்று தூக்கி செல்ல முயன்ற போது அப்பறவை பொதுமகன் ஒருவனால் அடித்து துரத்தப்பட்ட காரணத்தால் சிறுமி காப்பாற்றப்பபட்டுள்ளார்.

இந்த சம்பவம் இப்பகுதி மக்கள் மத்தியில் பெறும் அச்சத்தையும் ,ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான ஓர் அதிசய பறவை அப்பகுதியிலோ அல்லது இலங்கையிலோ காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடல் பகுதியில் வாழும் சீகல் பறவையாக இருக்கலாமெனவும் அப்பிரதேச மக்களிடம் சந்தேகம் உருவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிறுமி சாலினி வாசனா தெரிவிக்கையில்,

நானும், அண்ணன், தம்பியும் தாத்தாவுடன் திருப்பனை குளத்தில் தாமரை பூப்பறிக்க போயிருந்தோம்.

பிற்பகல் 4 மணியிருக்கும் தாத்தா தாமரை பூப்பறிக்க குளத்தில் இறங்கினார். நாங்கள் குளத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு கழுகு பறந்து வந்தது. நானும் அதனை பார்த்து கொண்டிருந்தேன். அந்த கழுகு பறந்து வந்து என் தலையில் சிறகுகளால் இரு முறை தாக்கியது.

நான் கத்தினேன். என் தலையில் இருந்த தொப்பியை எடுத்து அதை தாக்கினேன். நாங்கள் சத்தமிடுவதை கேட்டு தாத்தா வந்தார். தாத்தா கரைக்கு வரும் போது, அந்த பறவை மற்றொரு முறை எனது தலையில் தாக்கியது.

அப்போது குளத்தில் இருந்து மாமா ஒருவர் பொல்லு ஒன்றில் அதனை அடித்தார். அதற்கு பின்னர் அது பறந்து போனது.

பறந்து சென்ற பறவை வானத்தில் வட்டமிட்டவாறு தம்பியிடம் வந்தது. அப்போது தாத்தா தம்பியை கையில் பிடித்திருந்தார்.

தாத்தா சேறுகளை கொண்டு தாக்கி சத்தமிட்டதும் அது பறந்து போனது. எனக்கு சரியான பயமாக இருக்கிறது என்றார்.

இந்த சம்பவம் பற்றிய பிள்ளைகளின் தாத்தாவான கே. சுனில் கூறுகையில்,

நான் குளத்தில் தாமரை பறித்து கொண்டிருந்த போது பிள்ளைகளை சுற்றி கழுகு போன்ற பறவை பறந்து கொண்டிருந்தது. நான் ஓடிச் சென்று சிறு பிள்ளை தூக்கிக் கொண்டு, சாலினியிடம் சென்றேன்.

குச்சிகளாலும் சேறுகளினாலும் அதனை தாக்கினேன். அது பயப்படவில்லை. அதன் சிறகுகள் சுமார் 6 அடி இருக்கும். சிறகுகள் மண் நிறத்தில் இருந்தது. அந்த பறவையை பார்க்கும் போது மிகவும் பயமாக இருந்தது. நாங்கள் அனைவரும் சத்தமிட்டது அது பறந்து போய்விட்டது என்றார்.

இந்த சம்பவத்தால் தனது பிள்ளைகள் மிகவும் அச்சத்தில் இருப்பதாக பிள்ளைகளின் தாயான பியாங்கா செனவிரத்ன தெரிவித்தார்.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyISaLdjv7.html#sthash.dCqFgRHs.dpuf
சிறுமி ஒருவரை தூக்கி செல்ல முயன்ற அதிசய பறவை Reviewed by NEWMANNAR on August 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.