மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலத்தில் திருட்டு-படங்கள்
மன்னார் உப்புக்குளம் திருவானைக்கூடம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலத்தின் கதவுகள் நேற்று இரவு (3) இனம் தெரியாதவர்களினால் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாக குறித்த ஆலயத்தின் பிரதம குரு பரமேஸ்வரசர்மா இன்று திங்கட்கிழமை(4) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை காலை 6 மணியளவில் ஆலயத்திற்குச் சென்ற குறித்த குரு பிரதான கதவை திறந்து உள்ளே சென்ற போது ஆலயத்தின் உள்ளக கதவு உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.
பின் ஆலயத்தினுள் சென்று பார்த்த போது உள்ளே உள்ள அலுமாரி உடைக்கப்பட்டு அம்மனின் பட்டு ஆடைகள் கீழே கொட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதோடு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உடனடியாக குறித்த ஆலயத்தின் பிரதம குரு பரமேஸ்வர சர்மா மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொட்ரிகோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த ஆலயத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின் பொலிஸ் மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் எவ்வித தடையங்களும் தென்படவில்லை. மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் உப்புக்குளம் ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலத்தில் திருட்டு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:
No comments:
Post a Comment