இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் முதலாவது கிளை மன்னாரில் திறப்பு-படங்கள்
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் முதலாவது கிளை இன்று திங்கட்கிழமை(4) மன்னார் மூர்வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
'கெய்க்கா' சர்வதேச நிறுவனத்தின் நிதி உதவியுடன் மன்னாரில் திறக்கப்பட்டுள்ள குறித்த உற்பத்தி நிறுவனத்தினை அமைச்சர் றிஸாட் பதியுதீன் வைபவ ரீதியாக இன்று திங்கட்கிழமை(4) திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட பயிற்சி ஆசிரியர்கள் 30 பேரூக்கு தற்காலிக நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஆடை உற்பத்தியை அதிகரிக்கும் வகைளிலும்,வேளையற்றவர்களுக்கு வேளைவாய்ப்புக்களை வழங்கும் வகைளிலும் குறித்த புடவைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் முதலாவது கிளை மன்னாரில் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதீயுதீன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர்,ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நவாஸ் முஸ்தபா , பிரதம எந்திரி விஜயரத்தின உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி நிறுவனத்தின் முதலாவது கிளை மன்னாரில் திறப்பு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:
No comments:
Post a Comment