க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்று (05) ஆரம்பிக்கப்படுகின்றன.
எதிர்வரும் 29ஆம் திகதி வரையில், 2 ஆயிரத்து 120 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில், இரண்டு இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இந்நிலையில், உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ள சகல பாடசாலைகளிலும் நிகழ்வுகள், கூட்டங்கள், கட்டட புனரமைப்புகள், வகுப்பு நடத்துதல் மற்றும் வாத்திய இசைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு, பரீட்சைகள் திணைக்களம் முற்றாக தடை விதித்துள்ளது.
இதேவேளை, ஊவா மாகாண தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் தமது பணிகளை தொடருமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 17ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment