நீர் தட்டுப்பாடு முள்ளிவாய்க்காலில் ”தூவல்” நீரப்பாசன முறையில் பயிர்ச்செய்கை
வடக்கில் தொடர்ந்தும் கடுமையான வரட்சி நிலவிவருகின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதி விவசாயிகள் தூவல் நீரப்பாசனத்தை பயன்படுத்தி பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர்.
வரட்சியினால் யாழ். குடா நாட்டின் பெரும்பாலான நீர் நிலைகள் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.
எனினும் நேற்றிரவு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுமார் இருபது நிமிடம் மழை பெய்துள்ளதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சுமார் பதினைந்து நிமிடம் வரையில் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் தொடர்ந்தும் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் நீர் தட்டுப்பாட்டுக்கு உகந்த நீர்ப்பாசன முறையான தூவல் நீரப்பாசனை முறையைப் பயன்படுத்தி மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர்.
இதற்கான உபகரணங்களை அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வழங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் மக்கள் சின்ன வெங்காயப் பயிர்ச் செய்கைளில் ஈடுபட்டு சிறந்த விளைச்சலைக் கண்டுள்ளனர்.
நீர்த்தட்டுப்பாடான காலத்தில் கிடைக்கும் குறைந்தளவான நீரைப் பயனபடுத்தி இந்த நீர்ப்பாசன முறையை பின்பற்றுவதன் மூலம் சிறந்த பலனை எட்டமுடியும் என்று முள்ளிவாய்க்கால் விவசாயிகள் கூறுகின்றனர்.
நீர் தட்டுப்பாடு முள்ளிவாய்க்காலில் ”தூவல்” நீரப்பாசன முறையில் பயிர்ச்செய்கை
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment