வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்.Photo
வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (18) மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் குறை நிறைகளைக் கேட்டறிந்தார்.
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த வடமாகாண சுகாராத அமைச்சார் பா.சத்தியலிங்கம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரஜனி அன்ரன் சிசில், மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரூபன் லெம்பேட்,மன்னார் வைத்தியசாலையின் நிர்வாக அலுவலகர் எஸ்.என்.எம்.சஜானி ஆகியோரை சந்தித்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் குறை நிறைகளைக்கேட்டறிந்தார்
.இதன் போது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
குறிப்பாக மன்னார் பொது வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாகவும்,வைத்திய சாலையின் குறைகள் தொடர்பாகவும் அதனை நிவர்த்தி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வடமாகாண சுகாராத அமைச்சார் பா.சத்தியலிங்கம் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்.Photo
Reviewed by NEWMANNAR
on
August 18, 2014
Rating:
No comments:
Post a Comment