மடு வான்பரப்பில் பறந்து திரிந்த சிறிய ரக மர்ம விமானம்
மன்னார், மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதி மேல் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது.
குறித்த சிறிய ரக விமானத்தின் மேல் பகுதியில் நான்கு விசிறிகள் சுற்றிக்கொண்டிருந்த நிலையில் குறித்த விமானம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தியே சுற்றிக்கொண்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இரைச்சலுடன் சுற்றிக்கொண்டிருந்த குறித்த விமானம் மடுத்திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
குறித்த சிறிய ரக விமானம் எதற்காக ? யாரால் பறக்கவிடப்பட்டது? என்ற விடயம் இதுவரை தெரியவில்லை.
இந்த சிறிய ரக விமானம் பக்தர்களின் பாதுகாப்புக்காக பறந்து திரிந்த உளவு விமானமே என சிலர் கருத்து தெரிவித்தனர்.
மடு வான்பரப்பில் பறந்து திரிந்த சிறிய ரக மர்ம விமானம்
Reviewed by NEWMANNAR
on
August 16, 2014
Rating:

No comments:
Post a Comment