பூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்பு
பிரேசிலில் பூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்கப்பட்டுள்ளார்.
பிரேசிலில் வாழ்ந்து வருபவர் கிலெனோ வியெய்ரா தா ரோச்சா (65).
பொறியியலாளரான இவர் விலா த சுகுந்துரி எனும் இடத்திலுள்ள காட்டிற்குள் வழி தவறி நுழைந்துவிட்டார்.
மானூஸ் நகரத்தில் இருந்து 435 கி.மீ தொலைவில் உள்ள அந்தக் காட்டில் இருந்து வெளியேற அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் 12 நாட்கள் காட்டிற்குள்ளேயே சுற்றித் திரிந்துள்ளார்.
அந்த 12 நாட்களும் அவர் காட்டில் உள்ள பூச்சிகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்கிறார். இந்நிலையில், அவர் மயக்கமடைந்த நிலையில் காட்டிற்குள் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்த விவசாயி ஒருவர், உடனே பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவரைப் பொலிஸார் மீட்டனர். இவர் அமேசான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதாலும், அதனால் அந்தக் காட்டைப் பற்றிச் சில விஷயங்கள் இவருக்குத் தெரிந்திருந்ததாலுமே இவரால் பிழைக்க முடிந்தது, என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூச்சிகளைத் தின்று 12 நாட்கள் உயிர் வாழ்ந்த முதியவர் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 24, 2014
Rating:


No comments:
Post a Comment